மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Congress Party Demonstration

ஈரோட்டில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு,

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்தும், பிரதமர் மோடிக்கு எதிராவும் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாநில கமிட்டி உறுப்பினர் மாரியப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், அயுப்அலி, திருச்செல்வம், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாட்சா, முகமது அர்சத், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய்கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அன்னூர் அருகே: தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 103 பேர் கைது
அன்னூர் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 103 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
4. நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. பெண் காவலர்கள் வயது சான்றை ஆய்வு செய்தோம்-ஆர்.எஸ்.எஸ்.; அதிர்ச்சி அளிக்கிறது-காங்கிரஸ்
சபரிமலையில் பெண் காவலர்களின் வயது சான்றை ஆய்வு செய்தோம் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் வல்சனின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.