மாணவர்கள் சாதனை படைக்க தலைமை ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருக்க வேண்டும்
மாணவர்கள் சாதனை படைக்க தலைமை ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருந்து செயல்பட வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி வனஜா பேசினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கூட்டம் புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தற்போது மழை காலமாவதால் ஒவ்வொரு பள்ளியிலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் வகை கொசுக்கள் உருவாகாதவாறு பள்ளி கழிவறை, பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக பராமரிக்க தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாணவருடைய வீட்டிலும், கிராமத்திலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உருவாகாதவாறு சுற்றுப்புற தூய்மையினை பராமரிக்க மாணவர்கள் மூலமாக பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் தீவிரமாக செயலாற்ற வேண்டும். மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து, பிளாஸ்டிக் இல்லா பள்ளியையும், சூழலையும் உருவாக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 100 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இம்பார்ட் என்னும் ஆய்வு கட்டுரை திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஒன்றிய, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் மாநில போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காக ஒன்றிய அளவில் கருத்தாளர்கள், மாவட்ட அளவில் வல்லுனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களின் ஆலோசனைகளை பெற்று தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பாடவாரியாக புதுமை முயற்சிகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் அடங்கிய சிறந்த ஆய்வு கட்டுரைகளை தயார் செய்து புதுக்கோட்டை மாவட்ட மாணவர்கள் சாதனை படைக்க தலைமை ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருந்து செயல்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் குணசேகரன், திராவிடச்செல்வம், மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story