கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2018 4:00 AM IST (Updated: 13 Nov 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கணினி, இணையதள வசதி போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இ-அடங்கல் சேவையினை அமலாக்கம் செய்வதை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் வசந்தகுமார் உள்பட கிராம நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் விராலிமலை தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். இதில் விராலிமலை கிளை கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் செல்லபாண்டி நன்றி கூறினார்.

Next Story