வையம்பட்டி அருகே ஆசிரியை குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்து ரசித்த 3 மாணவர்கள் கைது


வையம்பட்டி அருகே ஆசிரியை குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்து ரசித்த 3 மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 3:45 AM IST (Updated: 13 Nov 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே பள்ளி ஆசிரியை குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் அமலா(வயது 31)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது செல்போனில் வீடியோ எடுத்த ஒருவர், அந்த ஆசிரியையை வர்ணித்து கடிதம் ஒன்றை எழுதி வீட்டின் அருகே போட்டுள்ளார்.

இதை பார்த்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்ததுடன், இதுகுறித்து வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் செல்போனில் வீடியோ எடுத்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வீடியோ எடுத்தது, மணப்பாறையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த மாணவர் தான் எடுத்த வீடியோவை 12-ம் வகுப்பு படிக்கும் அவரது சகோதரர் மற்றும் 16 வயதுடைய மற்றொரு மாணவருக்கும் காண்பித்துள்ளார். அந்த காட்சியை 3 மாணவர்களும் பார்த்து ரசித்ததும் தெரிய வந்தது.

3 பேர் கைது

இதையடுத்து மாணவர்கள் 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

Next Story