சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கண்டித்து திருவாரூரில், அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கண்டித்து திருவாரூரில் அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கண்டித்தும், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் தமிழகம், கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சபரிமலையின் பாரம்பரிய புனிதம் காத்திட வேண்டி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அனைத்து அய்யப்ப பக்தர்கள் சார்பில் பேரணி-ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் பேரணியாக செல்வதற்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு குருசாமி மாயவன் தலைமை தாங்கினார்். அய்யப்ப பக்தர்கள் ஒருங்கிணைப்பாளர் சாமி முன்னிலை வகித்தார். இதில் அகில இந்திய அய்யப்ப சேவா சங்க மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட பொருளாளர் காமராஜ், ஆன்மிக ஆனந்தம் அமைப்பின் நிர்வாகி கனகராஜ், இந்து முன்னணி நகர தலைவர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் வெற்றி, குருசாமி கனகசபாபதி மற்றும் அகில பாரத அய்யப்ப சேவா சங்க மகளிர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், அனைத்து பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். சபரிமலையின் புனிதத்தை பாதுகாத்திட வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story