மயிலாடுதுறையில் மதுக்கடையை முற்றுகையிட முயன்ற 23 பேர் கைது
மயிலாடுதுறையில் மதுக்கடையை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த மதுக்கடை போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடத்தில் இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மேற்கண்ட இடத்தில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமையில் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஊர்வலமாக புறப்பட்டு மதுக்கடையை நோக்கி சென்றனர்.
23 பேர் கைது
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடேசன், சாமிநாதன், சேகர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை தடுத்து நிறுத்தினர். ஆனால் கட்சியினர் தடையை மீறி மதுக்கடையை முற்றுகையிட செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்கரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 23 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story