திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: நெல்லை பஸ்–ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது


திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: நெல்லை பஸ்–ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது
x
தினத்தந்தி 14 Nov 2018 3:45 AM IST (Updated: 13 Nov 2018 7:44 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவையொட்டி நெல்லை பஸ், ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை, 

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவையொட்டி நெல்லை பஸ், ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா 8–ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் வரத் தொடங்கியது. வெளியூர் பக்தர்கள் மற்றும் அல்லாமல், வெளி மாநில பக்தர்களும் சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

விழாவுக்கு நெல்லையை சுற்றியுள்ள அம்பை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று காலை நெல்லைக்கு குடும்பத்துடன் புறப்பட்டு வந்தனர்.

பக்தர்கள் கூட்டம் அலை மோதியது

அவர்கள் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள், திருச்செந்தூர் பயணிகள் ரெயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏறி திருச்செந்தூர் புறப்பட்டு சென்றனர். இதனால் ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

அதேபால் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


Next Story