அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ : ஒருவரின் கதி என்ன?


அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ : ஒருவரின் கதி என்ன?
x
தினத்தந்தி 14 Nov 2018 3:45 AM IST (Updated: 14 Nov 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

மும்பை அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை,

மும்பை அந்தேரி, வீரா தேசாய் சாலையில் உள்ள 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின், 5-வது மற்றும் 6-வது மாடியில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.

மேலும் தீப்பிடித்த மாடிகளில் சிக்கியிருந்த 3 பேரை பத்திரமாக மீட்டனர். ஒருவரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது. தீ விபத்தையடுத்து 4 மாடியில் வசித்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். 7-வது மாடியில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story