ஆம்பூர் அருகே ஆஞ்சநேயர் கோவிலின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


ஆம்பூர் அருகே ஆஞ்சநேயர் கோவிலின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Nov 2018 4:15 AM IST (Updated: 14 Nov 2018 7:22 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே ஆஞ்சநேயர் கோவிலின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே பெரியகொம்மேஸ்வரத்தில் பழமை வாய்ந்த வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜை மற்றும் விசே‌ஷ நாட்களில் சிறப்பு பூஜையும் நடப்பது வழக்கம். இந்த கோவிலுக்கு நிலம், தென்னந்தோப்பு ஆகியவையும் உள்ளன.

நேற்று முன்தினம் கோவில் அர்ச்சகர் தயாநிதிஸ்வர் வழக்கம் போல பூஜையை முடித்து கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை கோவில் வளாகத்தை சுத்தம் செய்ய பெண் ஒருவர் வந்தார். அப்போது கோவிலின் வாசல் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

ர்பொதுமக்கள் வந்து பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம் மற்றும் 6 பவுன் நகையும் மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஊர் நாட்டாண்மை வடிவேல் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழமை வாய்ந்த கோவிலில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story