மார்த்தாண்டம் மேம்பாலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை


மார்த்தாண்டம் மேம்பாலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Nov 2018 5:00 AM IST (Updated: 15 Nov 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் மேம்பாலம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

களியக்காவிளை,

மார்த்தாண்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மார்த்தாண்டம் மேம்பாலம் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் 9-வது தூண் அதிர்வதாக சிலர் சமூக வலை தளங்களில் பொய்யான தகவலை பரப்புகின்றனர். பாலம் இடிந்து விழப் போகிறது என்றும் பீதியை கிளப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம். தொடர்ந்து வதந்திகள் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பாலம் நான்கு தலைமுறைகளுக்கு மேல் மக்கள் பயன்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story