இலங்கையில் விடுதலையான 28 மீனவர்கள் இன்று மதுரை வருகை
இலங்கையில் விடுதலையான 28 மீனவர்கள் இன்று மதுரை வருகிறார்கள்.
ராமேசுவரம்,
ராமேசுவரம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 28 மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறையில் இருந்தனர். இவர்களை விடுதலைசெய்ய மீனவர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.
அதன்பேரில் இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில் கடந்த 3–ந்தேதி 28 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து 28 பேரும் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் 28 மீனவர்களும் கொழும்பில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இன்று மதுரை வருகின்றனர். இந்த தகவலை நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story