கூடுவாஞ்சேரி அருகே நகை, பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது 13 பவுன் நகை பறிமுதல்


கூடுவாஞ்சேரி அருகே நகை, பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது 13 பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 17 Nov 2018 3:45 AM IST (Updated: 16 Nov 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே நகை, பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காயரம்பேடு அருகே சந்தேகப்படும்படி சாலை ஓரமாக நின்றுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

பின்னர் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் தி.நகர் பகுதியை சேர்ந்த பழனி (வயது 32), கோடம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற மார்கெட் சுரேஷ் (40) என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் காயரம்பேடு பகுதியில் உள்ள வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவர்களிடம் இருந்து 13 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story