கீழக்கரையில் கடல் சீற்றத்தால் படகுகள் சேதம்


கீழக்கரையில் கடல் சீற்றத்தால் படகுகள் சேதம்
x
தினத்தந்தி 16 Nov 2018 10:33 PM GMT (Updated: 16 Nov 2018 10:33 PM GMT)

கீழக்கரையில் கடல் சீற்றத்தால் படகுகள் சேதம் அடைந்தன.

கீழக்கரை,

வங்கக்கடலில் உருவான கஜா புயல் காரணமாக கீழக்கரையில் பலத்த காற்று வீசியது. இதனால் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் கரையை நோக்கி சீறி பாய்ந்தன. மேலும் கடற்கரை அருகில் உள்ள பல தோப்புகளுக்குள் கடல்நீர் உட்புகுந்தது.

ராட்சத அலையின் காரணமாக கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. அதனை தொடர்ந்து அந்த படகுகளை மீனவர்கள் கரைக்கு மீட்டு வந்தனர். பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

புயல் காரணமாக நேற்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அரசு அதிகாரிகள் தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டதால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.


Next Story