இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய நடன இயக்குனர் கைது


இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய நடன இயக்குனர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2018 4:38 AM IST (Updated: 17 Nov 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய நடன இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

மும்பை அந்தேரி லோகண்ட்வாலா பகுதியை சேர்ந்தவர் அக்னிஸ் ஹாமில்டன் (வயது56). இவர் சினிமா நடன இயக்குனராக இருந்து வருகிறார். தனது ஏற்பாட்டில் வெளிநாடுகளில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் இளம்பெண்களை இவர் கட்டாய விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்து வருவதாக போலீசுக்கு புகார் வந்தது.

அதன்பேரில் போலீசார் நடன இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், அக்னிஸ் ஹாமில்டன் கென்யா, துபாய், பக்ரைன் போன்ற வெளிநாடுகளுக்கு நடன நிகழ்ச்சிக்கு சென்றிருந்த இளம்பெண்களை அங்குள்ள ஏஜெண்டுகள் மூலம் பாஸ்போர்ட், விசாக்களை பறிமுதல் செய்து வைத்து கொண்டு, பின்னர் அவர்களை விபசாரத்தில் தள்ளியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் அவரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இதில் அவருடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story