‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும் தம்பிதுரை பேட்டி
‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும் என தம்பிதுரை கூறினார்.
வெள்ளியணை,
கரூர் மாவட்டம், தாந்தோன்றி ஒன்றியம், மணவாடி ஊராட்சி பகுதியில் பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கீதா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று பேசினர்.
அதனை தொடர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘கஜா’ புயலினால் மழை அதிகம் பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் பலமாக காற்று வீசி அதிக சேதத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் பாராட்டுகின்றனர். இந்த புயலினால் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலை, மணப்பாறை, வேடசந்தூர் மற்றும் கிருஷ்ணராயபுரம், கடவூர் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த பகுதியில் சேதமடைந்துள்ள மின் கம்பங்கள் மாற்றப்பட்டு உடனடியாக மின் வினியோகம் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற பாதிப்பு ஏற்படும்போது மத்திய அரசு நிவாரண தொகையை அறிவித்துவிட்டு தான், சேதங்களை பார்வையிட குழுவை அனுப்புவது வழக்கம். ஆனால் இப்போது அப்படி செய்யவில்லை. இது குறித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம். இந்த புயலினால் ஏற்பட்டுள்ள மொத்த சேதத்தையும் கணக்கிட்டு அதற்கேற்ப மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story