ஐ.ஐ.டி, என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் பணி


ஐ.ஐ.டி, என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் பணி
x
தினத்தந்தி 19 Nov 2018 2:00 PM IST (Updated: 19 Nov 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் ஏராளமான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி., நாட்டின் புகழ்பெற்ற கல்வி மையங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் உள்ள இதன் கிளை கல்வி மையங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐ.ஐ.டி. டெல்லி கிளையில் சீனியர் லேபரேட்டரி அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருக்கிறது. வேதியியல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், கணிதவியல், மெக்கானிக்கல் உள்ளிட்ட 27 பிரிவுகளில் 103 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. பணியிடங்கள் உள்ள பாடப்பிரிவில் முதுநிலை படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-12-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விவரங்களை www.iitd.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இதேபோல ஐ.ஐ.டி. காரக்பூர் கிளையில் பிரின்சிபல் புராஜெக்ட் அதிகாரி பணிக்கு 5 பேர், முதுநிலை திட்ட அதிகாரி பணிக்கு 10 பேர், திட்ட வழிகாட்டி அதிகாரி 13 பேர், முதுநிலை திட்ட அதிகாரி, திட்ட அதிகாரி, இளநிலை திட்ட அதிகாரி பணிகளுக்கு 22 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இளநிலை பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு 3-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.iitkgp.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மற்றொரு அறிவிப்பின்படி ஐ.ஐ.டி. மும்பை கிளையில் திட்ட உதவியாளர், பாதுகாப்பு உதவி அதிகாரி பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரங்களை http://www.iitb.ac.in என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு 7-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

திருச்சி என்.ஐ.டி.

மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான என்.ஐ.டி.யின் பல்வேறு கிளைகளிலும் ஏராளமான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. திருச்சிராப்பள்ளியில் உள்ள என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னீசியன் மற்றும் டிரேடு, பட்டதாரி அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 34 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை https://www.nitt.edu என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 26-11-2018-ந் தேதியாகும்.

இதேபோல என்.ஐ.டி. மணிப்பூரில் நர்ஸ், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூ‌னியர் என்ஜினீயர் போன்ற பணிகளுக்கு 47 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். நர்ஸ் டிப்ளமோ படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை http://www.nitmanipur.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு 5-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

என்.ஐ.டி. குருசேத்ராவில் தொழில்நுட்ப அதிகாரி, சூப்பிரண்டன்ட், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 65 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், பிளஸ்-2 படித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணி யிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை http://nitkkr.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 14-12-2018-ந் தேதியாகும்.

Next Story