சுங்குவார்சத்திரம் அருகே தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை


சுங்குவார்சத்திரம் அருகே தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Nov 2018 4:15 AM IST (Updated: 21 Nov 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரம் அருகே தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் கிராமம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி விமலா (வயது 38). இவர்களுடைய மகள் கோமதி (18). இவர் உறவுக்கார பையனை காதலித்து வந்தார். பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் காதல் விவகாரம் கோமதியின் பெற்றோருக்கு தெரியவந்தது. காதலுக்கு கோமதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கோமதிக்கு உறவுக்கார வேறு பையனை பார்த்து பேசி திருமண நிச்சயம் செய்துள்ளனர். காதலனை மறந்து வேறு ஒருவரை திருமணம் செய்ய கோமதி மறுத்து வந்தார். இதனால் கோமதிக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடித்து ரவி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் விமலாவும், கோமதியும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விநாயகம் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார். ரவிக்கு கோமதி தவிர மேலும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

Next Story