திருச்செந்தூர்-கடம்பூரில் கனமழை தூத்துக்குடியில் வீடு இடிந்தது


திருச்செந்தூர்-கடம்பூரில் கனமழை தூத்துக்குடியில் வீடு இடிந்தது
x
தினத்தந்தி 21 Nov 2018 3:30 AM IST (Updated: 21 Nov 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர், கடம்பூரில் நேற்று கனமழை பெய்தது. மழைக்கு தூத்துக்குடியி ல் வீடு இடிந்து சேதம் அடைந்தது .

தூத்துக்குடி, 

திருச்செந்தூர், கடம்பூரில் நேற்று கனமழை பெய்தது. மழைக்கு தூத்துக்குடியி ல் வீடு இடிந்து சேதம் அடைந்தது .

பரவலாக மழை

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் ஆங்காங்கே லேசான மழை பெய்ய தொடங்கியது. நேற்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காலை 8 மணி வரை நீடித்தது. பின்னர் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியத்துக்கு பிறகும் லேசான சாரல் மழை பெய்தது.

வீடு இடிந்தது

இந்த மழை காரணமாக போல்டன்புரம் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருச்செந்தூரில் நேற்று முன்தினம் இரவில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் அதிகாலையில் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து தினசரி மார்க்கெட் செல்லும் வழியில் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். வீரபாண்டியன்பட்டினம் ராஜ்கண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்கியது.

Next Story