தர்மபுரி ஆடு அறுக்கும் கூடத்தில் குவிந்து கிடக்கும் எலும்புகளால் நோய் பரவும் அபாயம்


தர்மபுரி ஆடு அறுக்கும் கூடத்தில் குவிந்து கிடக்கும் எலும்புகளால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:30 PM GMT (Updated: 20 Nov 2018 9:37 PM GMT)

தர்மபுரி டேக்கீஸ் பேட்டையில் கோட்டை கோவிலுக்கு செல்லும் சாலையில் நகராட்சி சார்பில் ஆடு அறுக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது.

தர்மபுரி,

தர்மபுரி டேக்கீஸ் பேட்டையில் கோட்டை கோவிலுக்கு செல்லும் சாலையில் நகராட்சி சார்பில் ஆடு அறுக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வெட்டப்படும் ஆடுகளில் பிரித்தெடுக்கப்படும் பெரிய அளவிலான எலும்புகள் நகராட்சி சார்பில் அவ்வப்போது அகற்றப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ஆட்டு எலும்புகள் அங்கிருந்து முறையாக அகற்றப்படவில்லை.

இதேபோல் ஆடு அறுக்கும் கூடம் உள்ள வளாகம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளிலும் ஏராளமான எலும்புகள், இறைச்சி கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் முகம்சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆங்காங்கே மர்மக்காய்ச்சல் பரவி வரும் இந்த நேரத்தில் ஆடு அறுக்கும் கூடத்தில் இருந்து எலும்புகள், இறைச்சி கழிவுகள் அகற்றப்படாதால் நோய் பரவும் அபாயம் அதிகரித்து உள்ளது. எனவே இந்த வளாகத்தில் குவிந்து கிடங்கும் எலும்புகளை உடனடியாக அகற்றவும், இந்த வளாகத்தை தினமும் தூய்மைப்படுத்தி முறையாக பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story