வானவில் : ஹெச்.டி.சி. வைவ் போகஸ் அறிமுகம்


வானவில் : ஹெச்.டி.சி. வைவ் போகஸ் அறிமுகம்
x
தினத்தந்தி 21 Nov 2018 7:45 AM GMT (Updated: 21 Nov 2018 7:45 AM GMT)

கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹெச்.டி.சி. நிறுவனம் வைவ் போகஸ் என்ற பெயரிலான வி.ஆர். (வெர்ச்சுவல் ரியாலிடி) ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு நவம்பரில் இதை அறிமுகம் செய்தனர். ஆனால் இப்போதுதான் சர்வதேச சந்தைக்கு இது விற்பனைக்கு வந்துள்ளது. இதை வை-பை மூலம் செயல்படுத்தலாம். இதில் 3-கே அமோலெட் பேனல் உள்ளது.

குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 மொபைல் விஆர் பிளாட்பார்ம் இதில் உள்ளது. 110 டிகிரி கோணத்தில் படங்களை பார்க்கும் வசதி கொண்டது. இதன் விலை ரூ. 43,600 ஆகும்.

Next Story