அய்யப்ப பக்தர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அய்யப்ப பக்தர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 6:22 PM GMT)

அய்யப்ப பக்தர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தர்மபுரி, கிருஷ்ணகிரியில் சபரி மலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்ட சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ்ஜி தலைமை தாங்கினார். பா.ஜனதா மாவட்ட தலைவர் வரதராஜன், இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முரளி, சேவா பாரதி மாவட்ட பொருளாளர் ஆதிமூலம், தர்மரட்சனா சமிதி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ். சேலம் கோட்ட செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோபிகிருஷ்ணன், பாஸ்கர், மாநில மகளிரணி செயலாளர் மதிவதனகிரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். சபரி மலையில் அய்யப்ப பக்தர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த கேரள அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்களை சிறைபிடிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் செயல்களை அனுமதிக்ககூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் செல்லபாண்டியன், பொருளாளர் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், வர்த்தகர்அணி கோட்ட பொறுப்பாளர் சரவணன் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பா.ஜனதா நகர தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

கிருஷ்ணகிரியில் சபரிமலை பக்தர்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் அன்னைய்யா தலைமை தாங்கினார். மாவட்ட இணை தலைவர் சங்கர்லால் முன்னிலை வகித்தார். பா.ஜ.க. மாநில மகளிரணி செயலாளர் கார்த்திகாயினி பேசினார். சேலம் கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், அகில பாரத வக்கீல் சங்க மாநில செயல் தலைவர் பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் ஹரிகோடீஸ்வரன், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் ராஜா, பா.ஜ.க. மாவட்ட தலைவர் முனிராஜ், இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் சந்துரு, யுகேஷ்வரன், விஷ்வ இந்து பரிஷத் சாந்தகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை ஆர்.எஸ்.எஸ். மாவட்ட இணை செயலாளர் பிரேம்ஆனந்த் ஒருங்கிணைத்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது.

Next Story