கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்; மீனவர்கள் வழங்கினர்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்; மீனவர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:15 AM IST (Updated: 22 Nov 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீனவர்கள் நிவாரணை பொருட்களை வழங்கினர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் மீன்வளத்துறை மற்றும் ராமேசுவரம், தங்கச்சிமடம் மீனவர்கள் சார்பில் மீனவர் தின விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் மீனவர் சங்க தலைவர் சேசுராஜா வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் மீன்துறை துணை இயக்குனர் காத்தவராயன்,மீனவர் சங்க தலைவர்கள் போஸ், எமரிட், பங்கு தந்தை சந்தியாகு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு உதவி செய்ய ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ரூ. 1½ லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் மீனவர்கள் வழங்கினார்கள்.

விழாவில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:– மீன்பிடி தொழில் மிகவும் கடினமான தொழிலாகும். அனைத்து மீனவர்களுக்கும் மீனவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு உதவிகள் செய்வதற்காக முதல்–அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் காசோலையாக வழங்கியதோடு சுமார் 100 குடும்பங்களுக்கு தேவையான 1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை மீனவர்கள் வழங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், வட்டாரவளர்ச்சி அலுவலர் ராஜா, மீனவர் சங்க பிரதிநிதிகள் சகாயம், இருதயம், கிளாட்வின், பரதர் சமுதாய தலைவர் சம்சன், மீன்துறை உதவி இயக்குனர்கள் கோபிநாத், மணிகண்டன், ஊராட்சி செயலாளர் கதிரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story