சபரிமலை புனிதம் காக்க கோரி அய்யப்ப பக்தர்கள் போராட்டம்


சபரிமலை புனிதம் காக்க கோரி அய்யப்ப பக்தர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2018 3:45 AM IST (Updated: 22 Nov 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அய்யப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை,

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், சபரிமலை புனிதம் காக்க கோரியும் மதுரை முனிச்சாலை பகுதியில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள், பா.ஜனதா கட்சியினர், இந்து அமைப்புகள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பா.ஜனதா மாநில நிர்வாகி சீனிவாசன், மாநகர் தலைவர் சசிராமன், புறநகர் தலைவர் சுசிந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.


Next Story