அய்யப்ப பக்தர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அய்யப்ப பக்தர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:00 PM GMT (Updated: 21 Nov 2018 9:35 PM GMT)

கேரள மாநிலத்தில் சபரிமலை கோவிலுக்கு சென்ற அய்யப்ப பக்தர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை, 

கேரளாவில் உள்ள பிர சித்தி பெற்ற கோவில் களில் முக்கியமானது சபரிமலை அய்யப்பன் கோவிலாகும்.

இந்த கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் உள்ள அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கேரளாவில் உள்ள இந்துக்கள், இந்து முன்னணி, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கேரள அரசு அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பக்தர்களை போலீசார் அடித்து உதைத்து பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது.

இதைக் கண்டித்து தமி ழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார் கள்.

நெல்லை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், தமிழ்செல்வன், மகாராஜன், மண்டல தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், இளைஞர் அணி செயலாளர் வேல்ஆறுமுகம், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, மகளிர் அணி மாவட்ட தலைவர் கமலா, மாவட்ட பொருளாளர் பாபு, இந்து முன்னணி வக்கீல் குற்றாலநாதன், ராமகிருஷ்ணன் குருசாமி மற்றும் அய்யப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story