பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை வாலிபர் கைது


பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2018 11:21 PM GMT (Updated: 2018-11-22T04:51:21+05:30)

பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆபாச படம் அனுப்பி தொல்லை

மும்பை போரிவிலியை சேர்ந்த 35 வயது பெண்ணின் செல்போனுக்கு கடந்த 2 மாதமாக மர்ம ஆசாமி ஒருவர் ஆபாச குறுந்தகவல் மற்றும் படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்தார். இதனால் கோபம் அடைந்த பெண், அந்த எண்ணில் தொடர்புகொண்டு அந்த ஆசாமியை எச்சரித்தார். இருப்பினும் அந்த ஆசாமி தொடர்ந்து ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

வாலிபர் கைது

இதில், தகிசரை சேர்ந்த விக்கி சர்மா(வயது22) என்ற வாலிபர் தான் அந்த பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோல மும்பையை சேர்ந்த 28 வயது பெண் டாக்டர் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த அந்தேரி மரோலை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

Next Story