புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் முயற்சி


புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் முயற்சி
x
தினத்தந்தி 23 Nov 2018 4:15 AM IST (Updated: 23 Nov 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் சன்னாவூர் கிராமத்தில் விவசாயிகள் பலர் தங்களது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் மக்காச்சோள பயிர்கள் கடுமையான புழு தாக்குதலில் பாதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கேட்டு நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று சன்னாவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒன்று சேர்ந்து நின்று கொண்டு இருந்தனர்.

இதனை அறிந்த வருவாய் ஆய்வாளர் திருப்பதி, வேளாண் உதவி இயக்குனர் கண்ணன் மற்றும் வெங்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story