வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக மோசடி; 2 பேர் கைது


வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக மோசடி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2018 3:15 AM IST (Updated: 23 Nov 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை, 

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் அருகே உள்ள வண்ணாங்குண்டை சேர்ந்தவர் செல்லையா (வயது 62). இவரது மகன் சிவக்குமாரை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, திருப்பத்தூர் அருகே உள்ள என்.மேலாயூரை சேர்ந்த ஜெயக்குமார் (49). கீழச்சிவல்பட்டியை சேர்ந்த சாந்தி, இவரது மகள் லாவண்யா ஆகியோர் செல்லையாவிடம் ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டனர்.

ஆனால் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதேபோல சிவகங்கை மஜீத்ரோட்டை சேர்ந்தவர் கவுதம் (26). டிப்ளமோ படித்த கவுதமை சிங்கப்பூருக்கு அனுப்புவதாக கூறி திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ஆனந்தன்(39) என்பவர், கடந்த ஆண்டு ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டாராம். ஆனால் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பவில்லை.

பணத்தை திருப்பிக் கேட்ட போது கவுதமிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாம். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்யப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர்.

Next Story