புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயார் காலமானார்


புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயார் காலமானார்
x
தினத்தந்தி 23 Nov 2018 6:15 AM IST (Updated: 23 Nov 2018 6:15 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் நேற்றிரவு உடல் நலக்குறைவால் காலமானார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி. இவருடைய தாயார் ஈஸ்வரி அம்மாள் (வயது 96). இவர் பூரணாங்குப்பத்தில் உள்ள அவருடைய வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் புதுவை அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி அம்மாள் நேற்றிரவு மரணம் அடைந்தார். இதுபற்றிய தகவல் டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு விரைந்து வந்தார்.

Next Story