ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2018 4:30 AM IST (Updated: 25 Nov 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பகுத்தறிவு, திராவிடம், தமிழ் தேசியம் பேசக்கூடிய மாநிலத்தில் தான் ஆணவ படுகொலையும் நடக்கிறது. இதனைத் தடுக்க, தண்டிக்க மத்திய அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும். தேவேந்திரகுல வேளாளர்களை தற்போது உள்ள பட்டியலில் இருந்து விலக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 15–ந்தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மாநாடு நடைபெறும். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அன்றைய சூழ்நிலையில் தேர்தலை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில், 15 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை வி‌ஷயத்தில் கவர்னர் காலம்தாழ்த்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story