புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவின் ஆய்வுப்பணி திருப்திகரமாக இல்லை - கும்பகோணத்தில், ஜி.கே.வாசன் பேட்டி
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவின் ஆய்வுப்பணி திருப்திகரமாக இல்லை என்று கும்பகோணத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
கும்பகோணம்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நேற்று ரூ.35 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பும் நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதனால் அப்பகுதி மக்களுக்கு உடனடியாக தமிழக அரசு தார்ப்பாய்களை வழங்க வேண்டும். அவர்கள் இனியும் துன்பப்படக்கூடாது. ராணுவ ரீதியில் செயல்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் புதிய குழுவை அமைக்க வேண்டும். இதனால் நிவாரண பணிகள் முழுமை பெறும்.
மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக புதிய வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் முறையாக கணக்கெடுப்பது மூலம் சேத மதிப்பு சரியாக தெரியும். உடனடியாக புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனைத்து விவசாயிகளின் வங்கி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
பட்டுக்கோட்டை பகுதியில் 6 லட்சம் சதுர அடியில் செயல்பட்ட கோழி பண்ணை புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு ஒரு சதுர அடிக்கு ரூ.1000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவினர், 5 மாவட்டங்களை 3 நாட்களில் ஆய்வு செய்வது என்பது சரியாக இருக்காது. மாவட்டத்துக்கு ஒரு குழு என மத்திய அரசு அனுப்பியிருக்க வேண்டும்.
ஒரு குழு மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி ஆய்வு செய்வதில் பலன் இல்லை. எனவே மத்திய குழுவின் ஆய்வுப்பணி திருப்திகரமாக இல்லை. புயல் பாதிப்பால் மக்கள் அனைத்தையும் இழந்து விட்டனர். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. எனவே உடனடியாக பேரிடர் பாதித்த மாவட்டங்களாக இந்த பகுதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் இருந்திருந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையும், அங்கு ஏற்பட்டுள்ள சேதங்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கேற்பு மூலம் உடனடியாக கணக்கெடுக்கப்பட்டிருக்கும். அங்குள்ள சேதத்தின் உண்மை நிலவரம் வெளியில் வந்திருக்கும்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிய உள்ளது. அதை நீட்டிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வலியுறுத்த வேண்டும். புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நிலையறிந்து வருமான நோக்கத்தை கைவிட்டு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மேலும் ஒருவார காலத்துக்கு மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நிவாரண பணிகளுக்காக நவீன எந்திரங்களை கட்சி தொண்டர்களிடம் ஜி.கே.வாசன் வழங்கினார். பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் ரூ.35 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.
அவருடன் மாவட்ட தலைவர் ஜிர்ஜிஸ், நகர தலைவர் சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பண்ண உடையார், ராஜாங்கம், கிருஷ்ணமூர்த்தி, விடியல் சேகர் மாநில நிர்வாகி அசோக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story