கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க ஏற்பாடு - எச்.ராஜா பேட்டி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புயலால் வீடுகளை இழந்த பட்டா உள்ள மக்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதி உதவி வழங்கப்படும். மேலும் தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். கஜா புயல் முடிந்து 6 மணி நேரத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் முதல்-அமைச்சரை போனில் தொடர்பு கொண்டு புயல் சேதம் குறித்து கேட்டறிந்தனர். ஆனால் பிரதமர், மத்திய மந்திரிகள் யாரும் தமிழகத்திற்கு புயல் சேதத்தை காண வரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. தானே புயலின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும், முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியும் புயல் சேதத்தை பார்வையிட வரவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபடும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்கும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலுடன், இடைத்தேர்தலும் சேர்ந்து வந்தால் பெருமளவு பணப்பட்டுவாடா தடுக்கப்படும். எனவே பாராளுமன்ற பொதுத்தேர்தலுடன் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து என கூறினார் மத்திய குழு வருகைக்குப்பின், மத்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு சில நாட்களில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குவார். பா.ஜ.க. தலைவர்கள் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் புயலால் பாதித்த மக்களை சந்திக்கவே இல்லை என்பதை திருநாவுக்கரசர் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் ஆலங்குடி பகுதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி பேசுகையில், புயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றார்.

Related Tags :
Next Story