மணல் கடத்தலுக்கு உதவிய திசையன்விளை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


மணல் கடத்தலுக்கு உதவிய திசையன்விளை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Nov 2018 3:30 AM IST (Updated: 28 Nov 2018 6:15 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலுக்கு உதவிய திசையன்விளை போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திசையன்விளை, 

மணல் கடத்தலுக்கு உதவிய திசையன்விளை போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

மணல் கடத்தல் 

நெல்லை மாவட்டம் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திசையன்விளை அருகே உள்ள கொம்மன்குளத்தை சேர்ந்த சின்னத்துரை (வயது 43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர் மீது ஏற்கனவே 7 மணல் கடத்தல் வழக்கு உள்பட 10 வழக்குகள் உள்ளன.

மேலும் சின்னத்துரையின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், சின்னத்துரை மணல் கடத்துவதற்கு உதவியாக திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக வேலை பார்த்து வந்த போலீஸ்காரர் சிவா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிவாவை போலீசார் கைது செய்தனர்.

பணியிடை நீக்கம் 

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தீவிர விசாரணை நடத்தினார். பின்னர் போலீஸ்காரர் சிவாவை பணியிடை நீக்கம் செய்து (சஸ்பெண்டு) உத்தரவிட்டார்.

மேலும் மற்றொரு போலீஸ்காரர் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மணல் கடத்தலுக்கு உதவிய போலீஸ்காரர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்திருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story