சேலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்
சேலத்தில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
சேலம்,
சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சேலம் கலெக் டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் தேசிய பசுமைப்படை, ஜூனியர் ரெட் கிராஸ் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 850-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் உதவி கலெக்டர்(பயிற்சி) வந்தனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் அசோகன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியன், மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வக உதவி இயக்குனர் மோகனாம்பிகை, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன், உதவிப்பொறியாளர் ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் போது ‘மரம் வளர்ப்போம், வறட்சியை தடுப்போம்’, ‘இலவசமாக வரும் பிளாஸ்டிக் பை நமக்கு பாதிப்பே’ என்பன உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி சென்றனர். இந்த ஊர்வலம் திருவள்ளுவர் சிலை, பழைய பஸ் நிலையம் வழியாக சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.
Related Tags :
Next Story