மின்சாரம், குடிநீர் கேட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
மின்சாரம், குடிநீர் கேட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இடங் களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட் டது. இதனால் கந்தர்வ கோட்டை அருகே வேம்பன் பட்டி கிராமம் பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந் நிலையில் நிவாரண பொருட் கள் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு வேம்பன் பட்டி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் கந்தர்வ கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட் கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதேபோல் கந்தர்வ கோட்டை பஸ் நிலையம் அருகே உடையார்தெரு, பெரியக்கடைவீதி, சின்ன அரிசிக்கார தெரு மற்றும் குமரன் காலனி, இந்திரா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கந்தர்வ கோட்டை நகரத்திற்கு நிவா ரண பொருட்கள் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கந்தர்வக்கோட்டை தாசில் தார் நேரில் வந்து நிவாரண பொருட்கள் வழங்க உறுதி யளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆனால் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
அப்போது அந்த வழியாக வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை முறையாக அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் பிரித்து வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். அப்போது அமைச்சர் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறி யலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆலங்குடி அருகே உள்ள கரும்பிரான்கோட்டை கிராமத்தில் புயலால் குடிநீர், மின்சாரம் வழங்ககோரி ஆலங்குடி -அறந்தாங்கி சாலையில் காலிக்குடங் களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென் றனர். இதனால், ஆலங்குடி -அறந்தாங்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் வடவாளம் காலனி பொதுமக்கள் குடிநீர் கேட்டு புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி சுற்று வட்டார கிராம பகுதியில் கஜா புயல் காற்றில் அதிக அளவில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மரங்களும் சேதம் அடைந் துள்ளன. சீரமைக்கும் பணி யில் மின்சாரத்துறை பணி யாளர்கள் ஈடுபட்டனர் வருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் காற்று வலுவிழந்து 13 நாட்கள் ஆகியும் மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியும், எங்கள் கிராமத்தில் இருந்து அடுத்த கிராமத்திற்கு செல் லும் பகுதியில் மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உடனே எங்கள் கிராமத்திற்க்கு மின்இணைப்பு கொடுக்க வேண்டும் என கோரி அறந் தாங்கி அடுத்துள்ள கூத்தங் குடி பகுதி பொதுமக்கள் கட்டுமாவடி சாலையில் மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனே மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அரிமளம் ஒன்றியம் செங்கீரையில் மின்வினி யோகம் செய்யபடாததை கண்டித்து பொதுமக்கள் செங்கீரையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் அரிமளம் பேரூ ராட்சிக்கு உட்பட்ட காசில் பழனி தெருவில் மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் அரிமளம் சிவன்கோவில் அருகே மறியலில் ஈடுபட் டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரிமளம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரி கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக மின்வினி யோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித் ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story