புயலால் பாதிக்கப்பட்ட தென்னை ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் திருநாவுக்கரசர் வலியுறுத்தல்


புயலால் பாதிக்கப்பட்ட தென்னை ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Nov 2018 10:45 PM GMT (Updated: 28 Nov 2018 9:03 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

ஆலங்குடி,

ஆலங்குடி பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகிய தென்னை, வாழை, பலா, மா, தேக்கு, ஆகியவை முற்றிலும், சேதம் அடைந்து விட்டன. அரசு நிவாரணமாக தென்னைக்கு ரூ.600 கொடுப்பதாக கூறுகிறது. விவசாயிகளின் 10 வருட வாழ்வாதாரம் போய் விட்டது. தென்னைக்கு குறைந்தது ரூ.5 ஆயிரமாவது வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஓட்டு வீடு மற்றும் குடிசைகளுக்கு அரசு கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும். நிவாரண பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் தர்மதங்கவேல், முன்னாள் ஏம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் புயலால் பாதிக்கப்பட்ட வெட்டன்விடுதி, சூரக்காடு, புதுப்பட்டி, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்று புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில், அரிசி, போர்வை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி, அண்டனூர், கந்தர்வகோட்டை, கோமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

Next Story