ரூ.2¼ கோடி நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


ரூ.2¼ கோடி நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 30 Nov 2018 4:30 AM IST (Updated: 30 Nov 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

பல பகுதிகளில் இருந்து வந்திருந்த ரூ.2 ¼ கோடி நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வரப்பெற்ற நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்தார்.

இந்த நிவாரண பொருட்கள் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு மற்றும் மாங்காடு பகுதிகளுக்கு வழங்கும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அரிசி, பருப்பு, போர்வை, பிஸ்கட், கொசுவர்த்தி சுருள், மெழுகுவர்த்தி, உடைகள் உள்ளிட்ட 12 வகையான பொருட் கள் அடங்கிய 1,700 எண்ணிக்கையிலான நிவாரண பொருட்கள் அடங்கிய பைகள் அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரண பொருட்கள் பாதிக் கப்பட்டவர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில், அரசு அலுவலர்களை கொண்ட குழு அமைத்து அவர்கள் மூலம் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கஜா புயல் நிவாரணமாக சேலம், கரூர், மதுரை, கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருச்சி, கோவை, நீலகிரி, விருதுநகர், திண்டுக்கல், ஈரோடு, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இதுவரை ரூ.2 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள் வரப்பெற்றன. இந்த நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்றார். இதில் கலெக்டர் கணேஷ், ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story