2 வயது குழந்தையுடன் கள்ளக்காதலி கொலை தனியார் நிறுவன ஊழியர் கைது
கணவரை பிரிந்து தன்னுடன் வர மறுத்ததால் 2 வயது குழந்தையுடன் கள்ளக்காதலியை கொலை செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு தேவனஹள்ளி விஜயபுராவை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சிக்பள்ளாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஷர்வானி (வயது 26). இந்த தம்பதியின் மகன் சாய் மனாஸ் (2). ஷர்வானி பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஷர்வானி கடந்த 19-ந்தேதி தனது மகன் சாய் மனாசுடன் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் விஜயபுரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் ஷர்வானி, தனது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் அந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக விஜயபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, ஷர்வானியின் தந்தை திருமலப்பா தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், மகள் ஷர்வானியையும், பேரன் சாய் மனாசையும் யாரோ கொலை செய்திருப்பதாகவும் விஜயபுரா போலீசில் புகார் கொடுத்தார். மேலும் ஷர்வானியின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவர் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக விஜயபுரா போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். தொட்டப்பள்ளாப்புரா துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் குமார், விஜயபுரா போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக ஷர்வானியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, அவருக்கு சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா அனூர் கிராமத்தை சேர்ந்த ஹேமந்த்குமார் (28) என்பவர் அடிக்கடி போன் செய்து பேசியிருப்பது தெரியவந்தது. மேலும் ஹேமந்த்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஹேமந்த்குமாரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், ஹேமந்த்குமாருக்கும், ஷர்வானிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதன்காரணமாக ஹேமந்த்குமார், ஷர்வானியிடம் ‘உன் கணவரை விட்டு என்னுடன் வா. நாம் தனியாக சேர்ந்து வாழலாம்’ என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு ஷர்வானி மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 19-ந்தேதி ஷர்வானியின் கணவர் ராஜேஷ் பள்ளிக்கு சென்றதும் அவரது வீட்டிற்கு ேஹமந்த்குமார் வந்துள்ளார். அப்போதும் அவர், ஷர்வானியிடம் கணவரை விட்டு தன்னுடன் வந்துவிடும்படி அழைத்துள்ளார். ஆனால் அதற்கு ஷர்வானி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த்குமார் ஷர்வானியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் அவருடைய 2 வயது மகன் சாய் மனாசையும் அவர் கொலை செய்தார்.
பின்னர் அந்த கொலையை மறைக்க, ஷர்வானி மற்றும் சாய் மனாஸ் வாயில் ஹேமந்த்குமார் விஷத்தை ஊற்றி அவர்கள் தற்கொலை செய்துகொண்டது போல ஜோடித்துவிட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து விஜயபுரா போலீசார் ஹேமந்த்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவரை பிரிந்து தன்னுடன் வர மறுத்ததால் கள்ளக்காதலி மற்றும் அவருடைய 2 வயது மகனை தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story