குமரியில் 2,500 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கருத்தரங்கில் டாக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் 2,500 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கருத்தரங்கில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவில்,
உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. புறநோயாளிகள் பிரிவில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அதிகாரி பெடலிக்ஸ் ஷமினா வரவேற்றார். மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம், குமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் பசும்பொன் சண்முகையா ஆகியோர் பேசினர்.
மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். முன்னதாக துணை முதல்வர் லியோ டேவிட், தோல் மற்றும் பால்வினை பிரிவு துறை தலைவர் பிரவீன், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். அதைத் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. கடைசியாக 3 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் எந்த குழந்தைக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இல்லை. எனினும் குமரி மாவட்டத்தில் தற்போது நிலவரப்படி 0.1 சதவீதம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது சுமார் 2,500 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருக்கிறது.
எய்ட்ஸ் பாதித்தவர்களை தீண்ட தகாதவர்களாக கருத கூடாது. அவர்களையும் அரவணைத்து அன்பு காட்ட வேண்டும். எய்ட்ஸ் இல்லாத உலகை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து கருத்தரங்கில் கலந்து கொண்ட டாக்டர்களும், நோயாளிகளும் சேர்ந்து எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்று கொண்டனர். மேலும் கருத்தரங்கில் பங்கேற்ற அனைவரும் தங்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருக்கிறதா? என்று ரத்த பரிசோதனை செய்தனர்.

Related Tags :
Next Story