முத்துப்பேட்டையில் மதுவிற்ற 4 பேர் கைது


முத்துப்பேட்டையில் மதுவிற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2018 3:45 AM IST (Updated: 2 Dec 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் மதுவிற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் முத்துப்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய பஸ் நிலையத்தில் சந்தேகம் படும் வகையில் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கப்படுத்தான்காட்டை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 33) என்பதும், புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை சாக்கு மூட்டையில் வைத்து கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல தில்லைவிளாகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் (32), தில்லைவிளாகம் கீழக்கரையை சேர்ந்த முத்து (46), பேட்டை பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (44) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story