ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி


ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி
x
தினத்தந்தி 2 Dec 2018 4:00 AM IST (Updated: 2 Dec 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் குடிகாடு கிராமத்தில் ஊர் பொது இடத்தை அதே ஊரை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகிறார்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் குடிகாடு கிராமத்தில் ஊர் பொது இடத்தை அதே ஊரை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஊர் பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர். கலெக்டர் உத்தரவின்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கூறிவிட்டு அந்த இடத்தில் பதாகை வைத்துவிட்டு சென்றனர். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஆண்டிமடம்- ஜெயங்கொண்டம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அதிகாரி குருநாதன், வருவாய் அதிகாரி திலகவதி, கிராம நிர்வாக அதிகாரி கலியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story