காவிரியில் அணை கட்ட யாருக்கும் உரிமை கிடையாது தம்பிதுரை பேட்டி
காவிரியில் அணை கட்ட யாருக்கும் உரிமை கிடையாது என தம்பிதுரை கூறினார்.
தரகம்பட்டி,
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், செம்பியநத்தம் ஊராட்சி பகுதியில் பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு, பூசாரிபட்டி, அரசகவுண்டனூர், சின்னமுத்தம்பாடி, மண்பத்தையூர், நரியம்பட்டி, நாயக்கனூர், நல்லூரன்பட்டி, ராயப்பகவுண்டனூர், ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட சென்னம்பட்டி, செவலூர், சேர்வைகாரனூர், எருதிக்கோன்பட்டி, மேட்டுப்பட்டி, பால்மடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அதனை தொடர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய இடைக்கால நிவாரணம் போதாது. ஆகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முதலில் கேட்ட ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்க மீண்டும் வற்புறுத்துவார்கள். விரைவில் நாடாளுமன்றம் கூட இருக்கிறது. அங்கும் கஜா புயல் பாதிப்பு குறித்து குரல் கொடுப்போம். கர்நாடகத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் போட்டி, போட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்.
தேசிய கட்சிக்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லாததால் அரசியல் நோக்கத்துடன் பார்க்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் உணர்வு, திராவிட உணர்வு மேலலோங்கியுள்ளது. தேசிய கட்சிகளுக்கு இங்கு இடம் இல்லாத நிலை இருக்கிறது. எனவேதான் புறக்கணிக்கிறார்கள்.
தேசிய கூட்டணியான காங்கிரஸ் இப்போது 2 மாநிலங்களில் தான் ஆளுகிறது. அது மாநில கட்சியாக மாறும் நிலைமை இருக்கிறது. பா.ஜ.க.வும் காலப்போக்கில் மாறிவிடும். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. காவிரியில் எந்த அணையும் கட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இதனை உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நிவாரணம் வழங்குவதில் அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும். காவிரி பிரச்சினையில் தி.மு.க. போராட்டம் நடத்துவது தேவையற்றது. காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கிருஷ்்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் லியாகத் (குளித்தலை), வட்டாட்சியர் கற்பகம் (கடவூர்), கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் செல்வராஜ், கிருஷ்ணன், சித்ரா, வட்டார வளர்ச்சி அதிகாரி மனோகரன், கடவூர் முன்னாள் சேர்மன் செல்வராஜ், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story