இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 2 பேர் விடுதலை
இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் வினோத், மகாராஜா ஆகிய 2 பேரும் சங்குமால் கடற்கரையில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் தெர்மாகோல் மிதவையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அப்போது இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். பின்னர் 2 பேரும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மீனவர்கள் வினோத், மகாராஜா ஆகிய 2 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இதைதொடர்ந்து 2 பேரும் கொழும்பில் உள்ள இந்திய துணை தூதகர அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஓரிரு தினங்களில் அவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story