மின்சாரம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் திருத்துறைப்பூண்டியில் நடந்தது


மின்சாரம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் திருத்துறைப்பூண்டியில் நடந்தது
x
தினத்தந்தி 5 Dec 2018 4:15 AM IST (Updated: 5 Dec 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் வழங்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் கஜா புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும், வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் கேட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி அண்ணாநகர் பகுதியில் மின்சாரத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் குணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story