பேராவூரணி அருகே மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பேராவூரணி அருகே மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ரெட்டவயலை அடுத்த மேலமணக்காடு கிராமத்தில் கஜா புயலுக்கு பிறகு 20 நாட்களாகியும் மின்வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்க முடியாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். 10 மற்றும் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு இன்னும் இரண்டு, மூன்று மாதமே உள்ள நிலையில் படிக்க முடியாமலும், இரவு நேரங்களில் கொசுக்கடியால் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் ரெட்டவயல் கடைவீதியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகள் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பட்டுக்கோட்டை மின்வாரிய உதவி கோட்டபொறியாளர் ராதாகிருஷ்ணன் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இன்னும் 2 நாட்களில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், மேல மணக்காடு பகுதியில் கஜா புயலால் 2 மின்மாற்றிகள், 250-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மற்ற பகுதிகளில் 60 மின்வாரிய ஊழியர்களை கொண்டு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. எங்கள் பகுதியை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றார்.

Related Tags :
Next Story