விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:00 AM IST (Updated: 5 Dec 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி,

அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முத்தமிழன் நாகமுத்து தலைமை தங்கினார். கலைமுரசு முன்னிலை வகித்தார். திருமாறன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கஜா புயல் காற்றில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும். புயல் காற்றில் வீடு, ஆடு, மாடு இழந்த பொதுமக்களுக்கு நிவாரண மதிப்பை முறையாக எடுத்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். காற்றில் சேதம் அடைந்த மின்மாற்றி கம்பங்களை சரி செய்து உடனே மின்சார வசதி ஏற் படுத்தி கொடுத்து மின்சார கட்டணத்தில் விலக்கு அளித்து, பயிர் காப்பீடுகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் திலீபன் ராஜா, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெய்சங்கர் நன்றி கூறினார். 

Next Story