திருப்பத்தூரில் ஒரு டன் கலப்பட டீ தூள் பறிமுதல்; குடோனுககு அதிகாரிகள் சீல் வைத்தனர்
திருப்பத்தூரில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஒரு டன் கலப்பட டீ தூளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து குடோனை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகர்ப் பகுதிகளில் உணவு பாதுகாப்பு ஆணையாளர் அமுதா, கலெகடர் ஜெயகாந்தன் ஆகியோர் உத்தரவின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் டாகடர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சையது இப்ராகிம், செல்வம், வேல்முருகன் ஆகியோர் திருப்பத்தூர் அகிழ்மனைத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, அகிழ்மனைத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடோனில், பல பெயர்களில் அனுமதியில்லாமல் கலப்பட டீ தூள் பேககிங் செய்து வந்தது தெரியவந்தது.
இதில் 500 கிராம், 1 கிலோ எடை கொண்ட டீ தூள் பாககெட்களும், பல மூடைகளில் பேககிங் செய்வதற்காக வைகப்பட்டிருந்த கலப்பட டீ தூளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ஒரு டன் கலப்பட டீ தூள் மற்றும் புதியதாக பெயர் கொண்ட 500 கிலோ பேககிங் கவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் காளையார்கோவில் அருகே உள்ள வேதியாரேந்தலைச் சேர்ந்த தர்மராஜ் (வயது 50) என்பவர் அகிழ்மனைத்தெருவில் கடந்த 2 ஆண்டுகளாக கலப்பட டீ தூள் குடோன் வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் டீ தூளில் செயற்கை வண்ணம் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பான அறையில் வைத்து குடோனுக்கு சீல் வைககப்பட்டது. கலப்பட டீ தூள் பரிசோதனைககு அனுப்பி வைககப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறும்போது, தர்மராஜ் கடந்த 2 ஆண்டு கலப்பட டீ தூள் குடோன் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குடோன் அமைக்க உரிமம், அனுமதி பெறவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சம். தொடர்ந்து பரிசோதனை அறிககையின் பேரில் நீதிமன்றத்தில் வழககு தொடரப்பட்டு, தர்மராஜ் மீது நடவடிககை எடுககப்படும் என்றார்.