மாவட்ட செய்திகள்

குடிநீர்-மின்சாரம் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் + "||" + Rural people to block drinking water and electricity

குடிநீர்-மின்சாரம் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர்-மின்சாரம் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
மேலதுளசேந்திரபுரம், காக்கையாடியில் குடிநீர்- மின்சாரம் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலதுளசேந்திரபுரம் கிராமத்தில் கஜா புயல் பாதித்து 20 நாட்களை கடந்தும் குடிநீர், மின்சாரம் இன்னும் வழங்கவில்லை. இந்தநிலையில் குடிநீர், மின்சாரம் வழங்கக்கோரி நேற்று கிராமமக்கள் காலிக்குடங்களுடன் மேலதுளசேந்திரபுரத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி- மதுக்கூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர் அருகே உள்ள காக்கையாடி கிராம பகுதியில் புயலால் சாய்ந்த மின்கம்பங்களை விரைவாக சீரமைத்து மின்சாரம் வழங்கக்கோரி நேற்று காக்கையாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பழையனூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் வடபாதிமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் மின்சாரம் சீரமைக்கும் பணிகள் ஏற்கனவே நடந்து கொண்டு இருப்பதாகவும், சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் தாமதமின்றி வழங்கப்படும் என்று கூறினர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கூத்தாநல்லூர்- வடபாதிமங்கலம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. காதலியை ஏமாற்றிய வாலிபரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்
காதலியை ஏமாற்றிய வாலிபரை கைது செய்யக்கோரி காதலியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு வலியுறுத்தினால் தனிமையில் இருந்த வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் மிரட்டுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
2. குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேர் கைது
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
4. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. பாலியல் கும்பல் மீது நடவடிக்கை கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
பொள்ளாச்சியில், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்ட கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர்.