சாத்தான்குளத்தில், வருகிற 12-ந் தேதி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடுவதற்கு எதிர்ப்பு
சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் வருகிற 12-ந் தேதி(புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சாத்தான்குளம்,
சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் வருகிற 12-ந் தேதி(புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அரசு போக்குவரத்து கழக பணிமனை
சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கடந்த 8-3-2016 அன்று தொடங்கப்பட்டது. இங்கிருந்து 6 பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் சிக்கன நடவடிக்கையாக, சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள பஸ்களை மற்ற பணிமனைகளுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாத்தான்குளத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
போராட்டம் நடத்த முடிவு
தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தனம், நகர தலைவர் வேணுகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மகாராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இங்கிருந்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வருகிற 12-ந்தேதி(புதன்கிழமை) சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டமும், வருகிற 20-ந்தேதி சாத்தான்குளம் புதிய பஸ் நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டமும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story