மாவட்டம் முழுவதும் 8 ரேஷன்கடைகளில் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது
நாமக்கல் மாவட்டம் முழுவதும் 8 ரேஷன்கடைகளில் குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக் கிழமை) நடக்கிறது.
நாமக்கல்,
மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலம் தாலுகா தோறும் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாதத்திற்கான பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நாமக்கல் தாலுகாவில் மின்னாம்பள்ளி ரேஷன் கடையிலும், சேந்தமங்கலம் தாலுகாவில் பொட்டணம் ரேஷன் கடையிலும், ராசிபுரம் தாலுகாவில் பொன்பரப்பிப்பட்டி ரேஷன் கடையிலும், கொல்லிமலை தாலுகாவில் மேல்கலிங்கம்பட்டி ரேஷன் கடையிலும், மோகனூர் தாலுகாவில் செங்கப்பள்ளி ரேஷன் கடையிலும், திருச்செங்கோடு தாலுகாவில் சித்தாளந்தூர் ரேஷன் கடையிலும், குமாரபாளையம் தாலுகாவில் பள்ளிபாளையம் டி.என்.சி.எஸ்.சி. ரேஷன் கடையிலும், பரமத்திவேலூர் தாலுகாவில் கருதேவம்பாளையம் ரேஷன் கடையிலும் என 8 ரேஷன் கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
இதில் பொது வினியோக திட்டத்தை செயல்படுத்தும் துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட் ரேஷன்கார்டுகளில் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும் ரேஷன்கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் இந்த முகாம்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story