நினைவுநாளையொட்டி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி


நினைவுநாளையொட்டி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி
x
தினத்தந்தி 6 Dec 2018 9:45 PM GMT (Updated: 2018-12-07T01:16:18+05:30)

சேலம் மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

சேலம், 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மவுன ஊர்வலம் நடத்தினார்கள்.

கொங்கணாபுரம் ஒன்றியம், பேரூராட்சி சார்பில் ரவுண்டானாவில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அட்மா திட்டக்குழு தலைவர் கரட்டூர்மணி கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளர் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தங்கராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் பிரேமசந்தர், மணி, மாணிக்கம், துணைத்தலைவர்கள் சின்னபையன், ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஒன்றிய நிர்வாகி தங்கவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

இடங்கணசாலை பஸ்நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவலிங்கம், பேரூர் இளைஞர் அணி செயலாளர் வேடியப்பன், இளைஞர் அணி தலைவர் குப்புசாமி, பண்டக சாலை தலைவர் ஏழுமலை, இணைச்செயலாளர் வசந்தி, வார்டு செயலாளர் பன்னீர்செல்வம், கந்தன், ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

சங்ககிரி பழைய பஸ்நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் 2-ம்ஆண்டு நினைவுதினத்தையொட்டி அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். சங்ககிரி ஒன்றிய செயலாளர் என்.எம்்.எஸ்.மணி தலைமையில், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் கே.வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் என்.சி.ஆர்.ரத்தினம், நகர செயலாளர் ஆர்.செல்லப்பன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் தொகுதி செயலாளர் வி.ஆர்.ராஜா, கத்தேரி முத்துசாமி, கருப்பண்ணன், நடராஜன், தங்கராஜீ, முருகன், சிவமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி கோட்டையில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் ஆத்தூர் தபால் நிலையம் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஆத்தூர் நகர செயலாளர் மோகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியின்போது கூட்டுறவு வங்கி தலைவர் தென்னரசு, நகர அவைத்தலைவர் கலியன், கோட்டை சின்னசாமி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் முஸ்தபா, ராமலிங்கம், காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story